Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! மகிழ்ச்சி பெருகும்…! கவலை விலகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! பண வரவால் மனம் மகிழும் நாளாக இருக்கும்.

எந்த வேலை செய்தாலும் கன கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த கவலை மறந்து கலகலப்பாக காணப்படுவீர்கள். அரசாங்க விஷயமாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வங்கி கடன் கேட்டு விண்ணப்பம் செய்வீர்கள். தங்கு தடையின்றி தனவரவு வந்துசேரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்று அமையும். தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி வேளாண்மை சிறுபட இருக்கும். மற்றவர்களிடம் அன்பு வெளிப்படுத்துவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வேலைப்பளு குறைந்து சுமுகமான நிலை ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

மாணவச் செல்வங்கள் கல்விக்காக போராட வேண்டி இருக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாடு மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |