கன்னி ராசி அன்பர்களே..!
இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்.
நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்கள் வாங்க வேண்டாம்.
நிதி மேலாண்மையில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவை உட்கொள்ள வேண்டும். கண் மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். காதலில் உள்ளவர்களுக்கு இன்று நிதானமான போக்கு வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு நெய்தீபம் ஏற்றினால் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.