கடகம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் குழப்பமான சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். இஷ்ட தெய்வ அருளால் அனைத்து காரியங்களிலும் முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் மற்றவர் பார்வையில் படும்படி இன்று நீங்கள் எந்த ஒரு விஷயமும் செய்ய கூடாது. கண் திருஷ்டி ஏற்படும் என்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். குழப்பமான சூழ்நிலையை திறமையாக இன்று நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நண்பரின் மதி நுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் இலக்கு தாமதமாகவே பூர்த்தியாகும். அளவான பணவரவு தான் இருக்கும். குடும்ப செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷன் கொடுப்பதாகவே அமையும்.
மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக தான் இருப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும், அன்பு கூடும். இன்று சில முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மனைவியிடம் ஆலோசனை கேளுங்கள் இல்லையேல் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். புதிய முயற்சிகளில் ரொம்ப ரொம்பக் கவனம் வேண்டும். அதே போல யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் ஏதும் காட்ட வேண்டாம். இந்த விஷயங்களில் மட்டும் கவனமாகவே இருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் வேலை சுமை அதிகரிக்கும்.
குடும்பத்தாரிடம் கலகலப்பாகவே நடந்து கொள்வீர்கள். ஆதாயம் தரும் பணி வீடு தேடி வரக்கூடும். இன்று காதலர்களுக்கும் ஓரளவு இனிமை காணும் நாளாகவே இருக்கங்க. இருந்தாலும் எப்பொழுதும் போலவே பேச்சில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.