துலாம் ராசி அன்பர்களே…! உயர்ந்த செயல்களால் புகழ் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்க கூடும். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவீர்கள். அதிகாரிகளின் பாராட்டைப் பெற கூடும். கொடுமை கஷ்டம் கடன் தொல்லை ஓரளவு சரியாகும். வாழ்வில் முன்னேற்றம் கூடும். தேவையில்லாத பயத்தை விலக்கி வைப்பது ரொம்ப நல்லது. பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்க கூடும். காரியத்தடை விலகி செல்லும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். உறவினர் வருகையால் செலவை கட்டுப்படுத்த பாருங்கள். திருமணத்தில் நல்ல வரன் வரும் வாய்ப்பு உண்டாகும்.
காதலில் உள்ளவர்கள் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மாணவக் கண்மணிகள் முயற்சியில் பெயரில் கல்வியை நன்றாக பயில வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.