மீனம் ராசி அன்பர்களே…! பிறரது அதிருப்திக்கு உட்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.
பணவரவு சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் சில மாற்றம் செய்வீர்கள். ஒவ்வாத உணவு வகைகளை தயவு செய்து உண்ண வேண்டாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளுங்கள். தூக்கம் குறைவதற்கு வாய்ப்பு இருக்கு. சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. வீட்டில் உங்கள் பேச்சை கேட்டு நடப்பதற்கான சூழ்நிலை அமையும். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தம் நீங்கும். குழந்தைகளிடம் ஆராய்ச்சி செய்யாமல் அவர்கள் போக்கில் விட்டு விடுங்கள். மனதிற்கு தகுந்தாற்போல் குழந்தைகளும் நடந்து கொள்வார்கள். தந்தையிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்தும் நடக்கும்.
காதலின் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும்.மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான், ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென் கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மட்டும் சந்தன நிறம்.