நாளைய பஞ்சாங்கம்
08-12-2020, கார்த்திகை 23, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.17 வரை பின்பு தேய்பிறை நவமி.
பூரம் நட்சத்திரம் பகல் 01.47 வரை பின்பு உத்திரம்.
சித்தயோகம் பகல் 01.47 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
முருக – பைரவர் வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
நாளைய ராசிப்பலன் – 08.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உடலில் சிறு பாதிப்பு உண்டாகும். வீட்டில் ஏற்படும் தேவையில்லாத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க கூடும். உத்தியோகத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். தொழில் உத்தியோகத்தில் ஆதரவு இருக்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பணவரவு ஓரளவு சுமாராக அமையும். குழந்தைகளால் வீண்செலவு இருக்கும். வீட்டில் தேவையில்லாத மனக்கசப்பு தோன்றி மறையும். தொழிலில் பொறுப்புடன் இருந்தவர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரநிலை சீராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து அமையும்.உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் இருக்கும். கடன் தொல்லை தீரும். மன அமைதி உண்டாகும். பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள்.
கடகம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத பிரச்சனை உண்டாகும். கொடுத்த கடனை திரும்ப பெற தாமத நிலை இருக்கும். தொழில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் குழந்தைகளால் சந்தோஷம் பெருகும். தெய்வ வழிபாடு மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பண வரவு இருக்கும் பொன்னும் பொருளும் வாங்கும் யோகம் அதிகமாக இருக்கும்.வீட்டில் பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமை விலகும். தெம்போடு செயல்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் லாபம் கிடைக்க சில இடையூறு உண்டாகும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடக்கும்.பெரிய மனிதர்களின் ஆயுதங்களால் வார்த்தையில் புது தெம்பு உண்டாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உடல்நிலை சீராக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக ரீதியில் நல்ல பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு அமோகமான பலன் தரும் சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் தாராள பணவரவும் லட்சுமி கடாட்சம் பெருகும். சிவ காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு எதிர் பாராத வீண் செலவுகள் வீட்டில் உண்டாகும். சிவ காரியங்களில் மந்த நிலை உண்டாகும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் மீன் பிரச்சனை உண்டாகும். எதிலும் கவனம் அவசியம். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபத்தைப் பெறுவீர்கள்.
மகரம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். எதிலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கிடைப்பதில் காலதாமதம் ஆகும்.ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் புதுப்பொலிவுடன் அன்புடனும் இருப்பீர்கள்.நண்பர்களின் ஆலோசனைகளால் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் புது உற்சாகம் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் அன்பு ஆதரவு அதிகரிக்கும். மாணவக் கண்மணிகள் படிப்பில் திறமைகள் வெளிப்படும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் சுமுக உறவு உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.