ரிஷபம் ராசி அன்பர்களே…! எல்லா வளமும் பெருகும் நாளாக இருக்கும்.
உல்லாச பயணம் உள்ளத்தை மகிழ்விக்கும்.பெண்களின் சினேகம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மன தைரியம் அதிகரிக்கும்.உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். எல்லாக் காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் இருக்கும். கௌரவம் அந்தஸ்து உயரும். எல்லா தரப்பினரிடமிருந்தும் ஆதரவு இருக்கும். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். மற்றவர்களுக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். உன்ன கனமாக தருணங்கள் அமையக்கூடும். குடும்பத்திலும் அன்பு வெளிப்படும்.
கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் பிரச்சனை இல்லை. மாணவ கண்மணிகளுக்கு ம் கல்வியில் எடுக்கும் முயற்சி வெற்றியை தரும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் அப்படியே நெய்தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் மஞ்சள் நிறம்.