கடகம் ராசி அன்பர்களே…! முயற்சிகள் தாமதமாவதால் சஞ்சலம் உண்டாகும்.
மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தந்தையாரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். தாய்க்கு வேண்டியதை வாங்கிக் கொடுங்கள். கோபங்கள் எதுவும் காட்ட வேண்டாம். காரியங்கள் தடை பட்டு தான் பின்னர் சரியாகும். தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது நல்லது. வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். தொழில் வியாபாரத்தில் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். தடைகளை தாண்டிதான் செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்யும் பொழுது கோபங்கள் காட்ட வேண்டாம். வேகம் காட்டாமல் நடந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக எதையும் செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் தேடி வரும்.மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதம் வரும் என்பதால் கவனம் வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். பேச்சில் அன்பு வெளிப்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் நீலம் நிறம்.