Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (09-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

09-12-2020, கார்த்திகை 24, புதன்கிழமை, நவமி திதி பகல் 03.18 வரை பின்பு தேய்பிறை தசமி.

 உத்திரம் நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு அஸ்தம்.

 அமிர்தயோகம் பகல் 12.32 வரை பின்பு மரணயோகம்.

 நேத்திரம் – 1.

 ஜீவன் – 1/2.

 புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எம கண்டம் காலை 07.30-09.00,

 குளிகன் பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

நாளைய ராசிப்பலன் –  09.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் இருக்கும். திடீர் பயணங்கள் உண்டாகும். தொழிலில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள்.குழந்தைகளால் வீட்டில் தேவை இல்லாத பிரச்சனை உண்டாகும்.உத்தியோக ரீதியில் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை ஏற்பட இடையூறு இருந்தாலும் லாபம் கிடைக்க வைக்கும்.தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி செல்லும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளுக்காக சிறு தொகை செலவிட கூடும். புதிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். உடல் நிலையில் சிறு உபாதைகள் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேற பொறுமையுடன் இருக்க வேண்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு புதுப் பொலிவுடனும் தெம்பாக இருப்பீர்கள்.உற்றார் உறவினர் மூலம் சுப செய்திகள் கிடைக்கப் பெற்று ஆனந்தம் பெறுவீர்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். சொத்து விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கூடும். பிரச்சனைகள் தீரும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடன் பிறப்புகளால் மன அமைதி சற்று நீங்கும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க தாமதம் இருக்கும். தொழில் போட்டி பொறாமைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்க ஆர்வம் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் சம்பந்தமான பயணங்கள் அனுகூலத்தை கொடுக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும்.தொழிலில் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நிம்மதியை அளிக்கும்.செலவுகளை சமாளிப்பதற்கு சிக்கனமாக நடந்து கொண்டால் நல்லது நடக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு காலையில் சுப செய்தி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஆதாயங்கள் பெருகும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நினைத்த காரியம் நினைத்தபடி இருக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும். உத்தியோகத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலன் அமையும். எடுக்கும் முயற்சி அனைத்திற்கும் வீட்டில் ஆதரவு கிடைக்கும். பயணங்களில் அனுகூலம் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் வழியில் செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் மந்த நிலை உண்டாகும்.சுப காரியங்களில் சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும். பிற பிரச்சனைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். தொழிலில் பெரிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக அமையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். எதிர்பார்க்காத உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய நபர் அறிமுகம் இருக்கும்.

Categories

Tech |