கும்பம் ராசி அன்பர்களே…! தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும்.
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கடன் பாக்கிகள் நாசுக்காக பேசி வசூல் செய்வீர்கள். பொருளாதாரத்தை இன்று பெருக்கிக் கொள்வீர்கள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவும் இருக்கும். அவர்கள் மூலம் அதிர்ஷ்டகரமான வாய்ப்பை பெறுவீர்கள். விளைச்சல் மிக சிறப்பாக இருப்பதால் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்.சந்தையில் நீங்கள் தனவரவு பெருக்கிக் கொள்வீர்கள். புதிய மனை வாங்கக் கூடிய நாளாக இருக்கும். முக்கியமாக வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்க வேண்டாம். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்ல. கலகலப்பான சூழல் உருவாகும். சகோதரர் ஒற்றுமை இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து விட்டு மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறம்.