நாளைய பஞ்சாங்கம்
11-12-2020, கார்த்திகை 26, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 10.04 வரை பின்பு துவாதசி.
சித்திரை நட்சத்திரம் காலை 08.48 வரை பின்பு சுவாதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
ஏகாதசி.
லக்ஷ்மி நரசிம்மர்- பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
நாளைய ராசிப்பலன் – 11.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். கொடுத்த கடன்கள் அனைத்தும் வசூலாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு நீங்கள் புது தெம்புடன் இருப்பீர்கள். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும் நல்ல பலன் உண்டாகும். உத்யோகத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவு இருக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உற்றார் உறவினர்களால் வீண் விரயங்கள் இருக்கும். உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மாற்றத்தை உண்டாக்கும்.உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகளால் நல்ல வாய்ப்பு அமையும்.
கடகம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மந்தநிலை உண்டாகும். உத்தியோகத்தில் தடை இருந்தாலும் லாபம் இருக்கும். தொழிலில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கடன் தொல்லை ஓரளவு நீங்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் இருக்கும். தொழிலில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி வாய்ப்பு இருக்கும். தொழிலில் லாபம் இருக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு சிக்கனமாக செயல்படுவது வந்தால் பிரச்சனை நீங்கும். குழந்தைகள் உடல் நிலையில் மந்தநிலை இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதம் ஆகும். உற்றார் உறவினர் பக்கபலமாக இருப்பார்கள். தொழிலில் வேலைப்பளு குறையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் பணிவுடன் செய்து முடிப்பீர்கள் அரசு தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். தொழிலில் கொடுக்கல்-வாங்கல் லாபமாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.அக்கம்பக்கத்தினர் அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் நீங்கும்.சுபகாரிய முயற்சிகளில் தடைக்கு பின் நல்ல பலன் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு முடியாத காரியத்தை கூட எளிதில் முடிப்பீர்கள். சுபகாரியங்களில் அனுகூல பலன் இருக்கும். தொழிலில் சிலருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தமாக வாய்ப்புகள் கைகூடும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
மகரம்
உங்களின் ராசிக்கு காலையிலேயே நல்ல செய்தி வந்து சேரும். பொருளாதாரம் சீராக இருக்கும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சி நல்ல பலனை தரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்கள் கை கூடும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். வீட்டில் வீண் மனஸ்தாபம் இருக்கும். உறவினர்களின் உதவியால் வீட்டில் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலைக் கொடுக்கும். எதிர்பார்த்த உதவி தாமதமில்லாமல் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். உங்களின் ராசிக்கு எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியிடங்களில் செல்லும்பொழுது வீண் வாக்குவாதங்களை பேச வேண்டாம். வெளி பயணங்களில் கவனம் தேவை.