Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய(12-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

12-12-2020, கார்த்திகை 27, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 07.02 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 03.53 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.

 சுவாதி நட்சத்திரம் காலை 06.30 விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு அனுஷம்.

 நாள் முழுவதும் சித்தயோகம்.

 நேத்திரம் – 0.

 ஜீவன் – 1/2.

 சனிப் பிரதோஷம்.

 சிவ வழிபாடு நல்லது.

 

இராகு காலம் – காலை 09.00-10.30,

  எம கண்டம் மதியம் 01.30-03.00,

 குளிகன் காலை 06.00-07.30,

 சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

நாளைய ராசிப்பலன் –  12.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி இருக்கும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். லாபம் பெருகும். கடன் தொல்லை தீரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன் வசூல் ஆகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். உறவினர்களால் தேவையில்லாத கருத்து வேறுபாடு இருக்கும். தொழிலில் புதிய கெடுபிடிகள் இருக்கும். வீட்டில் மனைவி வழியில் நல்லது உண்டாகும். தொழிலில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத மருந்து செலவு இருக்கும். உத்யோகத்தில் மந்த நிலை உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று தாமதம் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். தொழில் அனுகூல பலன் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும்.குழந்தைகள் பொறுப்பு அறிந்து  நடப்பார்கள். உடன்பிறந்தவர்களால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.வீட்டில் உறவுகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடு இருக்கும். பொருளாதார மந்த நிலை இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். தோழியை சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி உண்டாகும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகும். குழந்தைகள் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எந்த வேலையிலும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள்.உற்றார் உறவினர்கள் வகையில் வீண் செலவு இருக்கும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். தொழிலில் மேற்கொள்ளும் பயணத்தால் நல்ல பலன் கிடைக்கும். முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு இருப்பீர்கள்.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் தொழிலாளர்களுக்கு நினைத்த ஊதியம் கிடைக்கும். சிவ மதங்களில் முன்னேற்றம் இருக்கும். வங்கி சேமிப்பு உயரக்கூடும்.

மகரம்

உங்களின் ராசிக்கு காலையிலேயே மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். உங்கள் பிரச்சனை சரியாக உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் ஆர்வம் கூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். குழந்தைகளால் வீண்செலவு உண்டாகும்.உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனக் குழப்பம் அதிகரிக்கும். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்த்துவிடுங்கள். பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

Categories

Tech |