மகரம் ராசி அன்பர்களே…! நண்பர்களிடம் பேசி மகிழ கூடும்.
வாழ்வில் எதிர்கொண்ட சிந்தனைகள் பற்றி சிந்திப்பீர். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். சிந்தனைத் திறனையும் வளர்த்துக் கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும்.தொழில் வியாபாரம் வெளி பயணம் செல்ல வேண்டி இருக்கும். உபரி பண வருமானம் சேரும். குடும்பத் தேவை நிறைவேறும். நிலுவையில் உள்ள பணம் கூட வசூலாகிவிடும். பழைய பாக்கியை வசூல் செய்யும் பொழுது கோபங்கள் எதுவும் வேண்டாம். சிரமங்களை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள். தேவையில்லாத சிக்கலுக்கு நீங்கள் இடம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தாரிடம் கலந்து யோசித்த முடிவெடுக்கப்பாருங்கள். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தூக்கம் குறையக்கூடும்.
மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படிப்பிலும் நல்ல ஆர்வம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனால் தானமாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.