மீனம் ராசி அன்பர்களே…! முக்கிய பணி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் இருக்கும்.
ஞாபகம் மறதி இருக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அதிக பணத்தை செலவழிக்க வேண்டாம்.பணம் கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் எண்ணி பார்த்து வாங்க வேண்டும். பணவரவு சீராக இருக்கும் பிரச்சனை இல்லை. மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். வீண் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். கலகலப்புக்கு குறைவில்லை. வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கக்கூடும். பதவி உயர்வு போன்ற நல்ல விஷயம் கிடைக்கக்கூடும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். தேவையில்லாத மன பயம் இருக்கும். மனதை ஒருநிலை படுத்துங்கள்.
காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் சீரான அணுகுமுறையினால் காரியங்களை சாதிப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டுசிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.