இன்றைய பஞ்சாங்கம்
14-12-2020, கார்த்திகை 29, திங்கட்கிழமை, அமாவாசை திதி இரவு 09.46 வரை பின்பு வளர்பிறை பிரதமை.
கேட்டை நட்சத்திரம் இரவு 11.26 வரை பின்பு மூலம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
சர்வ அமாவாசை.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 14.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும்.தொழிலில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமலிருக்க வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியில் புதிய நபர் அறிமுகம் இருக்கும். உத்தியோகத்தில் வேலை செய்பவர்கள் பொறுப்பு அறிந்து இருப்பார்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உறவினர் வகையில் அனுகூலம் இருக்கும். சொத்து விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக இருப்பார்கள். உத்யோகத்தில் புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு இருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத மருந்து செலவு இருக்கும். உற்றார் உறவினர்களால் தேவை இல்லாத மன கஷ்டம் இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் ஆதரவும் உண்டாகும்.குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பிரச்சனை தீரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் நெருக்கடி இருக்கும். ஆடம்பரப் பொருட்களால் வீண் செலவு உண்டாகும். சுப காரியங்கள் கை கூடும். ஆனால் இடையூறு இருக்கும். தொழிலில் எதிர்பாராத சலுகை உண்டாகும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வியக்கத்தகு செய்தி வரும்.அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். சுப காரியங்களில் தடைகள் நீங்கும். வெளி கடன் வசூலாகும். மனதில் மகிழ்ச்சி இருக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும் எதிர்பாராத செலவுகளும் அமையும்.வங்கி மூலம் எதிர்பார்த்த கடனுதவி தாமதமாக இருக்கும். உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். உத்தியோகத்தில் பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுகூல பலன் அடைவீர்கள். நண்பர்களின் ஆலோசனை புது தெம்பை கொடுக்கும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதால் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறையும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து சென்றால் நல்லது.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் நல்ல பலனைக் கொடுக்கும்.
மகரம்
உங்கள் இராசிக்கு நினைத்த காரியம் நல்லபடியாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்ல கூடும். உத்தியோகத்தில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். தொழிலில் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயலில் அனைத்தும் வெற்றி கிடைக்கும்.வீட்டில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். வங்கிச் சேமிப்புகள் உயரக்கூடும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். சுப காரியங்களில் தடைகள் இருக்கும். வீட்டில் கருத்து வேறுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் மந்த நிலை மாறும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர் வழியில் உதவி கிடைக்கும்.