Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! பணவரவு இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! வீண் அலைச்சல்களால் ஓய்வு கொஞ்சம் குறையும்.

அம்மாவிற்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க வேண்டும். தந்தையிடம் அன்பை செலுத்துங்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் செய்து கொடுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கடினமாக இருக்கும். புதிய முயற்சி எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். நிதானமாக செயல்படுங்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். காரியத்தை சிறந்த முறையில் அணுகி வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும். கணவன் மனைவி இடையே இருந்த பிரிவு நீங்கி  ஒன்று சேருவீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டியவை செய்து கொடுப்பீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். வீண் பேச்சை குறைக்கப் பாருங்கள். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். தேவை இல்லாத மன பயம் இருக்கும். சுவாசத்தை சீர்படுத்துங்கள். நிதானமான போக்கைக் கடைப் பிடியுங்கள்.

காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் உறுதித்தன்மை இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |