துலாம் ராசி அன்பர்களே…! ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாக இருக்கும்.
கேட்ட இடத்தில் நல்ல உதவிகள் கிடைக்கும்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் அறிகுறிகள் இருக்கும். வெளிநாட்டு பயணம் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கலில் முதலீட்டை எளிதில் ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உதவிகளை பெறுவார்கள். பெண்களுக்கு முன்னேற்றமான தருணம் இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்பும் அமையும். மற்றவர்கள் உங்களிடம் உதவிகளை கேட்பார்கள். துலாம் ராசிக்காரர்கள் சொன்ன வாக்கை காப்பாற்றுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.உங்களுக்கு இன்றைய நாள் பொன்னான தருணங்களை கொடுக்கும். பிடித்தமான நபரை சந்திக்கக்கூடும்.தொழிலை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வீர்கள். உங்களை பார்த்து பொறாமைப் படுவார்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் ஆர்வம் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.இப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். முடிந்தால் மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்.