Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தீர்வு கிடைக்கும்…! வில்லங்கம் விலகும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! சஞ்சலங்கள் தீரும் நாளாக இருக்கும்.

மனதில் இருந்த இனம் புரியாத கலக்கம் தீரும். வளர்ச்சி உண்டாகும். உங்களை நீங்களே பெருமைப்பட்டுக் கொள்வீர்கள். நல்ல விஷயங்களையும் மனதில் ஏற்றுக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணத்தால் தேசநலன் கொஞ்சம் பாதிக்கப்படலாம். பயணம் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத பணவரவு திடீரென்று கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் யோகம் கூடும்.சொத்துப் பிரச்சனையில் இருந்த வில்லங்கம் யாவும் சரியாகும். லாபத்தை இருமடங்காக பெருக்கிக் கொள்வீர்கள். சீரான சுவாசம் உடல் ஆரோக்கியத்தை வசப்படுத்தும்.

கணவன் மனைவி இருவருக்கும் ஒற்றுமை பலப்படும். தாய் தந்தையரின் ஆதரவைப் பெறுவீர்கள். சமையல் செய்யும் பெண்களுக்கு எச்சரிக்கை வேண்டும். காதல் கைகூடும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அல்லது தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |