தனுசு ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் நல்ல மாற்றமும் திருப்பம் ஏற்படும்.
அரசு வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த லாபத்தையும் பெறுவீர்கள். கடன் பிரச்சினை ஓரளவு சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாக பொறுப்பு வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வு நடக்கும். கணவன் மனைவியிடையே சந்தோஷம் நிலவும். பொன்னான நாளாக அமையும். விலை உயர்ந்த ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். தொலைந்துபோன பொருளும் கையில் வந்து சேரும். பணம் விஷயமாக வெளியூர் செல்லக் கூடும். பயணம் பொழுது கவனம் வேண்டும். மற்றவர்களை நம்புவதில் சிக்கல் இருக்கும். மாணவக் கண்மணிகள் நிதானமாக பாடங்களைப் படியுங்கள். வாக்குவாதத்தை தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவைப்படும்.
காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழ்நிலை இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.