மகரம் ராசி அன்பர்களே…! வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.
பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசிய செலவுகள் மட்டும் செய்ய வேண்டும். தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்பட்டாலும் பிரச்சனை இல்லை. வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கத்தான் செய்யும். சரியான உணவை விகிதம் கண்டிப்பாக வேண்டும். பழைய பாக்கி வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையை முடிப்பதில் சிக்கல் இருக்கும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். கணவன் மனைவியை தீவிர ஆலோசனை எடுத்து பின்னர் முடிவு எடுக்க வேண்டும். அன்பை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளுக்கு கொஞ்சம் செலவு இருக்க தான் செய்யும். நெருக்கமானவர் உடன் ஏற்படும் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். திருமண முயற்சி நல்லபடியாக நடக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் கல்வியில் ஆர்வம் கூடும் எச்சரிக்கையாக படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.