நாளைய பஞ்சாங்கம்
17-12-2020, மார்கழி 02, வியாழக்கிழமை, திரிதியை திதி பகல் 03.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.13 வரை பின்பு திருவோணம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 17.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். வீட்டு தேவை பூர்த்தியாகும்.தொழிலில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீண் செலவுகள் உண்டாகும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில தடைகள் உண்டாகும்.எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும் அதுவே நல்லது. உங்களின் முயற்சிக்கு வீட்டில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க காலதாமதம் இருக்கும்.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.
கடகம்
உங்களின் ராசிக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். திடீர் பணவரவு இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்க ஆர்வம் கூடும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் சுறுசுறுப்பு இருக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் நல்ல பலன் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உறவினர் மூலம் பிரச்சினை இருக்கும்.உத்தியோகத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி இருக்கும்.தொழிலில் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் நல்ல பலன் உண்டாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உறவினர் திடீர் வருகையால் வீட்டில் செலவு இருக்கும். திருமண காரியங்களில் தடை தாமதம் இருக்கும். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். நண்பர்கள் உதவியால் உத்தியோகத்தில் பிரச்சனைகள் தீரும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கூடும். எதிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல் நிலை சீராகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு எதிர்பாராத செலவு இருக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனை இருக்கும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சி காலதாமதத்தை கொடுக்கும். உத்யோகத்தில் வெளிவட்டாரத் தொடர்பு கிடைக்கும். பணவரவு சுமாராக அமையும். தேவைகள் நிறைவேறும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். வராத பழைய கடன் வசூலாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தடைபடும். தொழிலில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். விட்டுக்கொடுத்து சென்றால் சிக்கல்கள் தீரும். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் இருக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் புதிய கூட்டாளி உடன் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும்.