Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்..! நண்பர்கள் கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டு கொள்வீர்கள். வாகனம்,வீடு வாங்க கூடிய யோகம் இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பழைய கடன் கொடுத்துவிட்டு புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் மூலம் முன்னேற்றமான நல்ல விஷயங்கள் நடக்கும். நேர்மையான எண்ணங்கள் வெளிப்படும். சமுதாயத்தில் அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள். ஆர்வம் அனைத்து விஷயத்திலும் இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். மற்றவர்களால் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் செல்வாக்கு கூடும். பணவரவை இருமடங்காக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.பெண்கள் நகைகளை இரவல் கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆலய வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் அன்பு வெளிப்படும். மாணவ கண்மணிகளுக்கு மட்டும் ஞாபகத்திறன் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விளையாட்டில் அதிகப்படியான ஆர்வம் இருக்கும். கொஞ்சம் பாடங்களை கூர்ந்து படியுங்கள் நல்லபடியாக படித்ததை எழுதிப் பாருங்கள் அப்போதுதான் எளிதாக நாம் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளவேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் சிறிய அளவில் தயிர் சாதத்தையும் அன்னதானமாக கொடுத்து மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது ரொம்ப ரொம்ப நல்லதுங்க இதனால் உங்களுடைய கண் பிரச்சனைகள் சரியாகும் கர்மவினைகள் தீரும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7.அதிர்ஷ்ட நிறம் சிவப்பு  மற்றும் அடர் நீல நிறம்.

Categories

Tech |