நாளைய பஞ்சாங்கம்
18-12-2020, மார்கழி 03, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.23 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.
திருவோணம் நட்சத்திரம் இரவு 07.04 வரை பின்பு அவிட்டம்.
மரணயோகம் இரவு 07.04 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாத சதுர்த்தி.
விநாயகர் வழிபாடு நல்லது.
ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
நாளைய ராசிப்பலன் – 18.12.2020
மேஷம்
உங்கள் ராசிக்கு திறமைகள் வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் மகிழ்ச்சி கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் ஆர்வம் கூடும். தொழிலில் சக கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர் மூலம் அனுகூலம் இருக்கும்.உத்யோகத்தில் கூட்டாளியின் ஆலோசனையால் முன்னேற்றம் பெறுவீர்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத மனக் கவலை இருக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் வீண் அலைச்சல் இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவது தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் வேண்டும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும்.தியாகத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக இருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு தொழிலில் அமோக நிலை இருக்கும்.வீட்டில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு அகலும். சுபகாரிய முன்னேற்றம் அளிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். கடன் தொல்லை தீரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு தொழிலில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். சுப காரியங்களில் தடைகள் இருக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்களிடம் உதவி உண்டாகும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனை நீங்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் மந்தநிலை இருக்கும். வீட்டில் பிள்ளைகளால் வீண் செலவு அதிகரிக்கும்.பணவரவு சுமாராக இருக்கும் ஆனால் வீட்டு தேவைகளும் பூர்த்தியாகும். உத்யோகத்தில் அலைச்சலுக்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்கும். சுப காரியங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சி இருக்கும். உத்யோகத்தில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்பு உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சி நல்ல முடிவைத் தரும். பொருளாதாரம் சீராக இருக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களுடன் சிறு சிறு வாக்கு வாதம் இருக்கும். ஆரோக்கிய ரீதியில் மருத்துவ செலவு செய்யக் கூடும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றத்திற்கான உழைப்பு நல்ல பலனை அளிக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை மகிழ்ச்சி இருக்கும். உற்றார் உறவினர்களால் பிரச்சனைகள் தீரும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சக நண்பர்களின் ஆதரவும் உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதி குறையும்.அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் பணிச்சுமை நீங்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த கடன்கள் அனைத்தும் வசூலாகும். உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு மகிழ்ச்சியான செய்திகள் வீடு வந்து சேரும். குழந்தைகள் அன்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு இருக்கும். உத்தியோகத்தில் அரசு வழி உதவிகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும்.