துலாம் ராசி அன்பர்களே…! வழக்கத்துக்கு மாறான பணிகள் தொந்தரவு கொஞ்சம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் வேண்டும். லாபம் கொஞ்சம் சுமாரான அளவில் தான் இருக்கும். பெண்கள் நகை பணம் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். உறவினர் வழியில் செலவு கொஞ்சம் இருக்கும். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத வீண் பேச்சை கண்டிப்பாக பேச வேண்டாம். செல்வாக்கு அந்தஸ்து கொஞ்சம் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். கடுமையான உழைப்பு இருக்கும். பணம் வருவதில் சிக்கல் இருக்கும். மனம் கொஞ்சம் விரக்தியான சூழ்நிலையில் இருக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். தந்தையிடம் தேவையில்லாத வாக்கு வாதம் செய்ய வேண்டாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். பெண்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே அணுக வேண்டும். மாணவக் கண்மணிகள் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும். கல்வியில் ஆர்வம் செலுத்தவேண்டும். விளையாடும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.