Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! விழிப்புணர்ச்சி வேண்டும்…! கவனம் வேண்டும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! வீண் விவாதங்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம்.

மனதை அமைதிப்படுத்த பாருங்கள்.தொழில் வியாபாரத்துக்கு சென்றவர்கள் சிரமம் எடுத்து தான் எதையும் செய்வார்கள். கூடுதலாக பணிச்சுமை இருக்கும். இலக்கு நிறைவேற கடுமையான உழைப்பு இருக்கும். லாபம் சுமாராக தான் வந்து சேரும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவருக்கு நல்ல வரன் வரும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். எந்த ஒரு பஞ்சாயத்திலும் கலந்து கொள்ள வேண்டாம். பிரச்சனை நடக்கும் இடத்தில் நிற்க வேண்டாம். தொழில் வியாபாரத்தை கவனமாக செய்யுங்கள். சில சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நேரிடும். வீண் பழி சுமக்க நேரிடும். மனதை தயவுசெய்து ஒருநிலைப்படுத்த வேண்டும்.வலது நாசியில் சுவாசம் வரும் பொழுது எந்த ஒரு முடிவையும் எடுக்க பாருங்கள்.

கணவன் மனைவி நிதானமாக எதிலும் அணுக வேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுமை காக்க வேண்டும். மாணவ கண்மணிகளுக்கு செயலில் நிதானம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் நல்லதைக் கொடுக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |