மீனம் ராசி அன்பர்களே…! சுய தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வீர்கள்.
உறவினர்களின் குறையை பெரிதுபடுத்த வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் தாமதம் இருக்கும். லாபம் சுமாராக தான் இருக்கும். பெண்கள் பயனற்ற பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். செலவை கட்டுப்படுத்த பாருங்கள். சேமிக்கும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். நீண்ட நாள் நோய் பிரச்சனை சரியான முறையில் தீர்வாகும். குடும்பத்தில் இருந்துவந்த மனக் கசப்பு மாறும். சுபகாரியங்களில் கவனம் செல்லும். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பார்கள். சொல்லையும் நீங்கள் செயலாக்கி கொடுப்பீர்கள். இறைவனின் அருள் இருக்கும். தாய் தந்தையரிடம் தேவையில்லாத வாக்கு வாதம் வேண்டாம். மாலை நேரத்தில் மனதை ஒருநிலை படுத்துங்கள்.
காதலில் உள்ளவர்கள் தேவையற்ற பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் செயலில் வேகம் காட்ட வேண்டும். முக்கியமான பணியில் இருக்கும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.