சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பூர்த்திச் செய்வீர்கள். ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தன வரவை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். நண்பர்கள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்களும் வரக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து, மாலை நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.