விருச்சிகம் ராசி அன்பர்களே…! உற்சாகம் மிக உன்னதமாக நாளாக இன்று இருக்கும்.
ஆடை ஆபரணம் சேரும். உடன் பிறப்பால் உதவிகளை ஏற்றுக்கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற்று விடுவீர்கள். தன்னம்பிக்கை கூடும். மனதில் தைரியம் உண்டாகும். பயணங்களால் சின்னசின்ன செலவு இருக்கும். உறவினர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். துணிச்சலுடன் எதிலும் செய்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். முன்னேற்றமான தருணம் அமைத்துக் கொள்வீர்கள். தேவையில்லாத வீண் பழியை சுமக்க நேரிடும். நீங்கள் செய்யாத காரியத்திற்கு தண்டனை அனுபவிக்க கூடும்.காவியத்தில் சின்ன சின்ன தடை இருந்தாலும் சுமுகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் மிகவும் நல்ல முறையில் இருக்கும். சில நபர்கள் சின்ன சின்ன பிரச்சனை எழுப்புவார்கள். எச்சரிக்கை அவசியம். இறைவனின் பரிபூரணமான அருள் இருக்கும். குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. தாயின் உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டும். தந்தையிடம் வாக்குவாதம் வேண்டாம்.
கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மாணவ கண்மணிகளுக்கு செயலில் வேகம் அதிகமாக இருக்கும். காதலில் உள்ளவர்கள் எந்த பேச்சையும் நிதானமாக பேசி முடிவுக்கு வாருங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியேசனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 5 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.