Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! பாக்கியம் கிட்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே…! நல்ல சிந்தனை கற்பனை வளம் போன்ற அனைத்து விஷயங்களிலும் நல்லது நடக்கும்.

உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி ஏற்படும்.பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை பார்ப்பீர்கள். உங்களைத் தேடி சில நபர் வரக்கூடும். உங்கள் உதவி சிலர் நாடக் கூடும். வெளியூர் செல்ல திட்டம்  தீட்டுவீர்கள். மன தைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் இருக்கும். பணவரவு பொறுத்த வரை பிரச்சனை இல்லை. ஆனால் உடல் நிலையில் சரிசெய்ய கூடும். தூக்கம் கொஞ்சம் குறையலாம். திருமணமாகாத நண்பர்களுக்கு நல்ல வரன் உண்டாகும். நல்ல வரனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரிகளின் தொல்லையும் இல்லை. அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபரின் உதவி கூட நல்ல முறையில் கிடைக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் நிதானம் வேண்டும். மாணவக் கண்மணிகள் நல்ல முறையில் படிப்பீர்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 4 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |