மீனம் ராசி அன்பர்களே…! வாய் அடக்கம் என்பது என்று கொஞ்சம் கண்டிப்பாக வேண்டும்.
வம்புக்கு செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.தேவையில்லாத பேச்சுக்கு கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டாம். பெண்களால் அதிகப்படியான விரயச் செலவு ஏற்படும். செலவை கட்டுப்படுத்த பாருங்கள். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்க வேண்டும். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். யாரை நம்புவது நம்பக்கூடாது என்று குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரும். தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். சுய சிந்தனையுடன் எதையும் எதிர் கொள்ளுங்கள். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதலைக் கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆர்வம் கூடும் அதனால் வெட்டி செலவு ஏற்படும். கொடுத்த கடனை திரும்ப பெற முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். கோபம் யாரிடமும் கொள்ள வேண்டாம்.
காதலில் உள்ளவர்களின் செயல்பாடு வருந்தத்தக்க வகையில் இருக்கும். மாணவக் கண்மணிகள் நல்ல முறையில் படிக்க வேண்டும். விளையாட்டை தவிர்க்கவும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்திலே தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.