துலாம் ராசி அன்பர்களே…! திட்டமிட்ட பணி சிறப்பாக நிறைவேறி தகுந்த பணி கிடைக்கும்.
தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைவீர். உபரி பணம் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். பிள்ளைகள் தேவையை நிறைவேற்றி கொடுப்பீர்கள். எந்த ஒரு பொருளையும் சலுகை விலையில் வாங்க கூடும். உங்களின் செயலுக்கு மற்றவர் ஆதரவுக்கரம் நீட்டுவர். அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நல்ல பலனை அடைவீர். சின்ன சின்ன விஷயங்களில் கவனம் அவசியம். தேவை இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். அசட்டுத்தனமாக எந்தவொரு பணியிலும் ஈடுபட வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லாத வாழ்க்கை அமையும்.
கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல தருணம் அமையும். மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்பு கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.