கன்னி ராசி அன்பர்களே…!
இன்று உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று காலதாமதம் உண்டாகும்.
பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் நன்றாக இருக்கும். புதிய கல்வி வாய்ப்புகள் மாணவ மாணவியர்களின் கண்முன் வந்து நிற்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் லாபம் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துச்சேரும். குடும்பத்தில் அமைதி தழுவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.