இன்றைய பஞ்சாங்கம்
21-12-2020, மார்கழி 06, திங்கட்கிழமை, சப்தமி திதி மாலை 04.15 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.
பூரட்டாதி நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு உத்திரட்டாதி.
மரணயோகம் இரவு 11.03 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 21.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன்பிறந்தவர்களால் உதவி உண்டாகும். தொழிலில் பணிபுரிபவர்கள் சமூக உறவு உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்க கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உத்யோகத்தில் முயற்சிகள் கிடைக்கும். முன்னேற்றம் உண்டாகும்.வெளியூர்களில் இருந்து வர வேண்டிய தொகைகள் வந்து சேரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் செலவுகள் இருக்கும். சுபகாரியம் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் கான சிறு தொகை கடன் வாங்க கூடும். கடின உழைப்பால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நண்பர்களால் உதவி உண்டாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு மாலை 4.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் மனக் குழப்பத்துடன் இருப்பீர்கள். வெள்ளிப் பாத்திரங்களில் கவனம் வேண்டும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மதியத்திற்குப் பின் செய்ய வேண்டும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு மாலை 4.30 மணி மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயலில் காலதாமதம் உண்டாகும். வீட்டில் அமைதி இல்லாத சூழ்நிலை இருக்கும்.தேவர் இதில் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு லாபம் உண்டாகும். எதிலும் நிதானம் வேண்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் எதிர்பாராத விரயங்கள் இருக்கும். தொழிலில் சக ஊழியர்களிடம் வீண் பிரச்சனைகள் இருக்கும். சீக்கிரமா செயல்பட்டால் பணப்பற்றாக்குறை தீரும். உத்யோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்பாராத இடத்தில் உதவிகள் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத செலவுகள் இருக்கும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிவ காரியங்களில் கவனம் வேண்டும்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் பிள்ளைகள் வகையில் சுப செலவுகள் இருக்கும்.எடுக்கும் முயற்சி அனைத்திலும் அனுகூல பலன் கிடைக்கும். தேவையில்லாத செலவுகள் குறைப்பதன் மூலம் சேமிப்புகள் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனை உத்தியோகத்துக்கு வளர்ச்சியைக் கொடுக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த பிரச்சனைகள் சந்திக்க இருக்கும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கக் கூட சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் மந்தநிலை இருக்கும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வீட்டில் ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி யான நிகழ்ச்சி இருக்கும். நண்பர்களின் ஆலோசனை தொழிலில் நல்ல பலனைக் கொடுக்கும். சுபகாரியங்களில் முன்னேற்ற நிலையிருக்கும்.தெய்வ தரிசனத்தில் வெளியூர் பயணம் செல்லக்கூடும். சேமிப்புகள் உயரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலனைக் கொடுக்கும். குழந்தைகளால் வீண் விரயம் உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சலை கொடுக்கும். அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் சிறு மாற்றுதல் செய்வதனால் லாபம் கிடைக்கும்.