சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும்.
எந்தவொரு பிரச்சனையிலும் தலையிட வேண்டாம். உறவுகளுக்கிடையே மனக்கசப்பு உருவாகும். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். இன்று முதல் சந்திராஷ்டமம் உண்டாவதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாருக்கும் வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். காரியங்களில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும்.
தொழில் போட்டிகள் குறையும். வருமானம் சீராக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு வெளிப்படும். யோசித்து செயல்படுவது நல்லது. பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். குடும்பத்தில் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். இன்று முயற்சி செய்துதான் முன்னேற வேண்டியதிருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.