துலாம் ராசி அன்பர்களே…! நினைத்தபடி தனலாபம் கிடைக்க கொஞ்சம் கஷ்டம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கவனமாக இல்லாவிட்டால் ஏமாறும் சூழ்நிலை இருக்கும். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்வீர்கள். தேவையில்லாத தொந்தரவுக்கும் ஆளாகவேண்டிய இருக்கும். பண விஷயத்தில் பொறுப்பு எதுவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரவேண்டிய பண வரவு சீராக இருக்கும். சில நபர்களிடம் நீங்கள் விலகி இருக்க வேண்டும். பயணங்கள் செல்லுமாயின் ரொம்ப ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள். எடுத்துக் கொண்ட பொருட்கள் மீது கவனம் வேண்டும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணம் பொழுதும் வாகனம் ஓட்டி செல்லும் பொழுதும் எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவி இருக்கும். பொறுப்புகளும் அதிகமாக இருக்கும். மாணவக் கண்மணிகள் பெரியவர்களையும் மதித்து நடப்பது ரொம்ப நல்லது. பாடங்களை சிரமத்துடன் படிக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முன் கோபத்தை கட்டுபடுத்த பாருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல் இருக்கத்தான் செய்யும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.