மகரம் ராசி அன்பர்களே..!
இன்று பல புதிய வாய்ப்புகளை அள்ளித்தரும் இனிய நாளாக இருக்கும்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் திருமணம் போன்ற சுபகாரியங்களில் ஈடுபடுவது போன்றவை வெற்றியை கொடுப்பதாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் ஆக்கம்தரும் சொந்த தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பலபுதிய வாய்ப்புகள் உங்களின் வாசலில் வந்து நிற்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள். கல்விக்காக பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.