துலாம் ராசி அன்பர்களே…! பிறரிடம் குடும்ப விஷயத்தை பற்றி பேச வேண்டாம்.
தெய்வீக நம்பிக்கை நன்மை கொடுக்கும். வியாபாரத்தில் சிரமம் ஓரளவு குறையும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். சீரான ஓய்வு உடல் நலனை பாதுகாக்கும். தேவை இல்லாத உணவு பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். பொறுமையை எப்பொழுதும் விட வேண்டாம். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ரகசியங்களைப் பற்றி மட்டும் பேச வேண்டாம். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்த பாருங்கள். கோபத்தை குறைக்க வேண்டும். பண வரவு குறைவாக இருந்தாலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்டு காரியங்களை செய்தாலும் சிறு குறை இருக்கும். எதிர்பாராத செலவை கட்டுப்படுத்த பாருங்கள். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளிடம் தேவையில்லாத பேச்சு கொடுக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று வரும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு அணுகுமுறையில் மாற்றம் இருக்கும். மாணவ செல்வங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.முக்கியமான பணியில் ஈடுபடும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.