கும்பம் ராசி அன்பர்களே…! உங்களின் தகுதி திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள வரவில் பணவரவு இருக்கும். பிரச்சனை இல்லாத சூழல் இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நிறைந்து காணப்படும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றி கொடுப்பீர்கள். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். கடுமையான உழைப்பை மேற்கொள்வீர்கள். எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியம் சாதிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவை பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர் நண்பர்களிடம் கோபப்படாமல் இருக்க வேண்டும். தேவையில்லாத கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். சுப காரியங்கள் இருக்கும்.
காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுக்காமல் பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 5. அதிர்ஷ்டநிறம் கருநீலம் மட்டும் மஞ்சள் நிறம்.