Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (25-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

25-12-2020, மார்கழி 10, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 01.54 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

 அஸ்வினி நட்சத்திரம் காலை 07.36 வரை பின்பு பரணி.

 அமிர்தயோகம் காலை 07.36 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 வைகுண்ட ஏகாதசி விரதம்.

 பெருமாள் வழிபாடு நல்லது.

 சுபமுகூர்த்த நாள்.

 சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

 எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 குளிகன் காலை 07.30 -09.00,

 சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

நாளைய ராசிப்பலன் –  25.01.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக் கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். வீட்டில் பெண்கள் பொறுப்பாக இருப்பார்கள். பொன்னும் பொருளும் வாங்கி மகிழக் கூடும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன உளைச்சல் உண்டாகும். வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை இருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க காலதாமதம் உண்டாகும். உத்யோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் நீங்கும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி கூடும்.தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலைப்பளு குறையக்கூடும். உத்யோகத்தில் புதிய கூட்டாளி உண்டாகும். இதுவரை இருந்த எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும்.

கடகம்

உங்கள் இராசிக்கு ஆரோக்கியம் சீராக இருக்கும். சுப காரியங்கள் பிரச்சனைகள் விலகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் மகிழும். உத்தியோகத்தில் லாபம் அமோகமாக காணப்படும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறைய சூழ்நிலை இருக்கும். குழந்தைகள் வழியில் மன சங்கடம் இருக்கும். புதிதாக வளர்ச்சிக்காக எடுக்கும் பலன் அனுகூலப் பலனை கொடுக்கும். தொழிலில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் தொல்லை நீங்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயலில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் அவசியம்.

துலாம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராத திடீர் பணவரவு இருக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறக்கூடும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.உத்தியோகம் சம்பந்தமாக வெளிவட்டாரத் தொடர்பு உண்டாகும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். வருமானம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு சுப செலவுகள் இருக்கும்.உத்தியோக வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் இன்று நடைபெறும். தொழிலில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவில் இருந்த இடையூறு அனைத்தும் விலகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத கருத்து வேறுபாடு இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்கும்.உத்தியோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது தரும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வரவைக் காட்டிலும் செலவு இருக்கும். புதிதாக ரீதியில் நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்க கூடும். சிக்கனமாக இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் உதவிகள் கைகூடும்.உத்தியோகத்தில் இருந்த பணிச்சுமையை உடனிருப்பவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க பெறுவீர்கள். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் உண்டாகும். வராத பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வருமானம் இரட்டிப்பாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக தான் அமையும். வீட்டில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.அனுபவம் உள்ளவர்களின் அறிவுரை உத்தியோகத்துக்கு பெரிதும் உதவும். உறவினர் உதவியால் பிரச்சனைகள் தீரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

Categories

Tech |