Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! தன்னம்பிக்கை அதிகரிக்கும்…! தைரியம் கூடும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தைக் கொடுக்கும் நாளாக இருக்கும்.

நினைத்ததை சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். தைரியத்தோடு தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவம் இல்லத்தில் நடக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களின் தேவையை நீங்களே பூர்த்தி செய்வீர்கள். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை ஏற்படும். மாலை நேரத்தில் நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு  மாறும். நெருக்கம் கூடும். சந்தான பாக்கியம் கிட்டும். முக்கியமாக தாய் தந்தையார் உடல்நிலையில் அக்கறை வேண்டும். பிள்ளைகளின் கல்வி பற்றிய பயம் இருக்கும்.புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று வரலாமா என்ற எண்ணம் இருக்கும். சகோதரர் ஒற்றுமை இருக்கும்.

காதலில் உள்ளவர்களின் அணுகுமுறையில் மாற்றம் இருக்க வேண்டும். மாணவ செல்வங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில்  நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

 

Categories

Tech |