நாளைய பஞ்சாங்கம்
08-09-2020, ஆவணி 23, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 12.03 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
பரணி நட்சத்திரம் காலை 08.26 வரை பின்பு கிருத்திகை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
சஷ்டி.
கிருத்திகை.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
நாளைய ராசிப்பலன் – 08.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு ஏற்ப செலவும் இருக்கும். வீட்டில் இருப்பவர்களிடம் ஒற்றுமை குறைய நேரிடலாம். உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள்.உத்தியோக ரீதியில் எந்த முயற்சி எடுத்தாலும் பெரியவர்களின் ஆதரவு பூரணமாக இருக்கும். நண்பர்களின் உதவியால் பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கும்.
ரிஷபம்
உங்கள் எந்த செயல் செய்தாலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். குழந்தைகளால் சுப செலவு ஏற்பட நேரிடும். அரச துறையில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்க வாய்ப்பு. உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகக் கூடும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் லாபம் மந்தமாக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். கனமான செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர் ஆதரவு கிடைக்கும். அனைவருடனும் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
கடகம்
உங்களின் ராசிக்கு உடனிருப்பவர்களின் அனுகூலம் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு. தொழிலில் உள்ளவர்களுக்கு தங்களின் திறமைக்கு ஏற்ப நல்ல வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பனாக உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உத்தியோக வீதியில் புதிய கருவிகளை வாங்கும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் பகல் 3.10 வரை இருப்பதால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியில் வீண் அலைச்சல் ஏற்படும். பெரிய தொகைகளை பிறரிடம் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.மதியத்திற்கு பிறகு மன உளைச்சல் சற்று குறைந்து அமைதி நிலவும்.
துலாம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் பகல் 3 .10 வரை இருப்பதால் எந்த செயல் செய்தாலும் அதில் சிறு தடங்கல் ஏற்படும்.தொழிலில் வெளியூர் பயணங்களால் தேவையற்ற டென்ஷன்கள் உண்டாகும். தேவையில்லாமல் வெளிப் பயணம் செல்வதை தவிர்க்கவும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல பயன் கிடைக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் பண வரவு இருக்கும். உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை உதவி பலப்படும். தொழிலில் நினைத்த இடமாற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் அகலும். உடல்நிலை சீராக இருக்கும். புதிய பொருட்களை வாங்க விரும்புவீர்கள்.
மகரம்
உங்கள் ராசிக்கு பணவரவு மந்தமாகத்தான் இருக்கும். வீண் செலவுகளை சமாளிக்க வெளியில் கடன் வாங்க நேரும். உத்யோகத்தில் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் மந்தநிலை அடையாது. உடன் இருப்பவர் களிடம் அனுசரித்து செல்லுங்கள் நெருக்கடிகள் குறையலாம். நண்பர்கள் உதவி கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் சுப செய்தி வரும். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல பயன் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர். தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையற்ற செலவு உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்க சேமிப்பு பணம் குறையும்.தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் இருப்பவர்களால் மகிழ்ச்சி கூடும்.தொழில் ரீதியான கொடுக்கல்-வாங்கலில் சிறிது கவனம் கொள்ளுங்கள்.