மீனம் ராசி அன்பர்களே…! காலையிலேயே நல்ல தகவல்களை கேட்பீர்கள்.
நல்ல விஷயங்கள் நல்லபடியாக இன்று நடக்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். புதிய நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். திட்டமிட்ட பணியில் நல்லதே நடக்கும். காரியங்களை நல்லபடியாக செய்து பாராட்டு பெறுவீர்கள். தொழில் போட்டி விலகி செல்லும். நிதி உதவியும் கிடைக்கும். கடன் பிரச்சனை அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். எதிரிகள் தொல்லை இல்லாமல் இருக்கும். அலுவலக பணியில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர் உற்சாகமாக இருப்பார்கள். எந்த வேலையிலும் ஆர்வம் கூடும். சாதகமான பலன்களும் அமையும். நல்ல வாய்ப்புகளை நீங்களே உருவாக்குவீர்கள். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு நடப்பீர்கள். ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மற்றவருக்கு முன்னுதாரணமாக இருப்பீர்கள். காதலில் வாய்ப்படும் சூழல் இருக்கும். எதிர்பாராத வகையில் தன லாபம் தேடி வரும். விழிப்புணர்வுடன் செயல்படுவது ரொம்ப அவசியம்.
காதலில் உள்ளவர்களுக்கும் காதல் கைகூடும். மாணவ செல்வங்களுக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்திலே நெய்தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 7 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஊதா நிறம்.