துலாம் ராசி அன்பர்களே…! தொழிலில் லாபம் இல்லாத காரணத்தினால் மனக்கவலை இருக்கும்.
தேவையில்லாத மனக் கவலை வேண்டாம். கொஞ்சம் சிரமம் எடுத்து எதிலும் ஈடுபட வேண்டும். தொழில் காரணமாக அலைய வேண்டி இருக்கும்.வீண் அலைச்சல் ஆக இருந்தால் முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும். நிம்மதியாக இருக்க மனதை தயார் படுத்த வேண்டும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. சந்திராஷ்டமம் தினம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை அவசியம். தொடர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் மூலம் ஓரளவு நன்மையான நல்லது நடக்கும். உடைமை மீது கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் எச்சரிக்கை அவசியம். எந்த தொழில் ரகசியம் சொல்ல வேண்டும். புத்தி கூர்மையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் முன் கோபத்தை காட்ட வேண்டாம். மனம் புண்படும்படி பேசவேண்டாம். ஆலயம் சென்று வருவது ரொம்ப நல்லது. மனம் சீராக இருக்கும். பெரிய தொகையை தயவுசெய்து கடனாக வாங்க வேண்டாம். இருப்பதை வைத்து செயல்பட வேண்டும்.
மாணவ செல்வங்கள் நல்ல முறையில் பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பேச்சில் நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக வைத்து வாருங்கள். அப்படியே தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் பச்சை நிறம்.