மகரம் ராசி அன்பர்களே…! இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியம் அனைத்தும் நடக்கும்.
வீன் வழக்குகளை ஒத்திப் போடுவது ரொம்ப நல்லது. வாகன சுகம் குறையும். உயரதிகாரிகளிடம் பணிவுடன் நடக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரக்கூடும். வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி கொள்ள நேரிடும். எந்த ஒரு காரியம் செய்தாலும் தாமதம் தான் மிஞ்சும். எல்லாவற்றிலும் இனம் புரியாத பயம் இருக்கும். புதிய நண்பர்களின் நட்பு உண்டாகும். அவர்களிடம் கவனம் வேண்டும். வீடு வாகனம் விஷயங்களில் கவனம் கூடும். மகரம் ராசி காரர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனை அதிகமாக இருக்கும். பெரியவர்களிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் தேவையில்லாத வாக்கு வாதம் வரும். உணர்ச்சிவசப்பட வேண்டாம். எந்த வேலையிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். கடன் வாங்க வேண்டாம்.
காதலில் உள்ளவர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் நல்லபடியாக படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக வைத்து வாருங்கள். அப்படியே சிறிதளவு தயிர் சாதத்தை கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் நீல நிறம்.