துலாம் ராசி அன்பர்களே…! சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள்.
அன்பு பாராட்டக் கூடும். சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் வேண்டும். பண பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம். பணப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சரியான உறக்கம் கண்டிப்பாக வேண்டும். பணவரவு நன்றாக இருக்கும். உறவினரிடம் பழகுவதில் கவனம் அவசியம். முன்னேற்றம் காண இறைவனின் பரிபூரணமான அருள் வேண்டும். புண்ணிய ஸ்தலம் சென்று வருவதற்கு வாய்ப்பு கூடும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். மாணவக் கண்மணிகள் நல்ல முறையில் பாடங்களை படிக்க வேண்டும். கல்வியில் ஆர்வம் கம்மியாக தான் இருக்கும். விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும். சோம்பேறித்தனமாக உடலில் இருக்கும்.
காதலில் உள்ளவர்கள் பேச்சில் நன்றாக பேச வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.