Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… “காதல் வசபடுவீர்”… அன்பு கூடும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். தொழில் வியாபாரமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். பணவரவு தேடி வரக்கூடும். ஆதாய வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி நிற்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியதடை நீங்கும். கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் காரியங்களை எதிர் கொள்ளுங்கள் அது போதும். பணவரவை பொறுத்தவரை மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.

உங்களுடைய செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனம் விரும்பியது போலவே செயல்படுவீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். புதிதாக காதலில் வயப்படக் கூடிய சூழலும் இருக்கும். இன்று எடுத்த செயலை திறமையாக செய்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட நல்ல படியாகத்தான் இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். காதலருக்கும் இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |