கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் பேச்சுக்கு சமுதாயத்திலும், குடும்பத்திலும் நல்லப் பெயர் கிடைக்கும்.
மாணவ மாணவியர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்க்கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலபுதிய பாதைகள் தென்படும். நீண்டகால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும் நல்ல தகவல் கிடைக்கும் நாளாகவுமிருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.