Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆதாயம் அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நல்ல நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும்.

அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். எதிரிகள் தொல்லை விலகிச்செல்லும். சிரமங்கள் குறைந்து உன்னதமான நாளாக இன்றைய நாள் அமையும். சிக்கல்களை சாமர்த்தியமாக தீர்த்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். முடிவெடுக்கும் போது கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

மனதில் குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்களுடன் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். வெளிநாட்டு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆதாயம் தரக்கூடிய பதவிகள் தேடிவரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |