துலாம் ராசி அன்பர்களே…! உறவினரின் பாசத்தை கண்டு மகிழ்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி வரும். வருமானம் சுமாராக தான் இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்வார்கள். திடீர் மாற்றம் உண்டாகும்.வேடிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சுபகாரியம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைந்து போன பொருள் கையில் வந்து சேரும். வாகனத்தை ஓட்டும்போது கவனம் வேண்டும். தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் பற்றிய கவலை தோன்றும். யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவ செல்வங்கள் கல்வியில் நன்றாக படிக்க வேண்டும் படித்த பாடத்தை எழுதிப் பார்க்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.