விருச்சிகம் ராசி அன்பர்களே…! இனிய வார்த்தைகளால் மற்றவரை கவர்ந்து விடுவீர்கள்.
வசீகரமான தோற்றத்தை வெளிப்படுத்துவீர்கள்.வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முயற்சிப்பீர்கள். வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழிலுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள்.உங்களின் பணியாளர்களிடம் அன்பு வெளிப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் நல்ல பண வருமானம் இருக்கும். சுபகாரிய பேச்சு நல்லபடியாக நடக்கும். பணவரவு இரட்டிப்பாகும். பழைய கடனை திருப்பி செலுத்தும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை சரியாகும். அரசாங்கம் அனுகூலம் கொடுக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் சீராக அமையும். உற்றார் உறவினர் பக்கபலமாக இருப்பார்கள் உற்றார் உறவினர் பக்கபலமாக இருப்பார்கள். பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு உன்னதமான சூழல் இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு எடுக்கும் திட்டம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கரும்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும்.உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண்2 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை மற்றும் வெளிர் நீலம்.